மின்சார கார்கள் விற்பனையில் ‘டாடா மோட்டார்ஸ்” வளர்ச்சி!

Scroll Down To Discover

டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், இதுவரை 10 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டைகோர் இ.வி., எனும் வாகனத்துடன், மின்சார வாகன பிரிவில் அடியெடுத்து வைத்தது. அதன்பின், நெக்ஸான் இ.வி., எனும் காரை அறிமுகம் செய்தது.

இந்நிலையில், இதுவரை மொத்தம் 10 ஆயிரம் கார்களை நிறுவனம் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. மின்சார கார் சந்தையில் 70 சதவீத பங்களிப்புடன் உள்ள டாடா மோட்டார்ஸ், அதன் முதல் 10 ஆயிரம் கார்களை வாங்கியவர்கள், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களாக இருப்பதாகவும், அவர்களுடைய ஆதரவால், மேலும் இப்பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ‘டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ், குரோமா, டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ்’ என பிற நிறுவனங்களின் உதவியுடன் இப்பிரிவில் செயல்படுவதாகவும், டாடா பவர்ஸ் நிறுவனம், 20 நகரங்களில் 700க்கும் மேற்பட்ட, ‘சார்ஜிங்’ கட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.