கொரோனா பரவல் காரணமாக மின்கட்டணம் செலுத்த தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது. அதன்படி ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.முன்னதாக மின்கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அதனை மின்வாரியம் நீட்டித்துள்ளது.
இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறுகுறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
Leave your comments here...