மாற்றுத்திறனாளியான பாஜக தொண்டர் : பாராட்டி செல்பி எடுத்த பிரதமர் மோடி..!

Scroll Down To Discover

சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஈரோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்ற பாஜக பூத் கமிட்டி உறுப்பினருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

அதனை, ‘சிறப்பு செல்பி’ எனக்குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது வைரலாகியது. கடைக்கோடி பூத் உறுப்பினரை பாராட்டி அவருடன் பிரதமர் செல்பி எடுத்து கொண்டதாக, தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்.


இது குறித்து மோடி, தனது சமூக வலைதளபக்கத்தில், செல்பி எடுத்த புகைப்படங்களுடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் மணிகண்டனை சந்தித்தேன். அவர், ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க தமிழக பா.ஜ., கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார். மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால், அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்.

மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.