மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்… சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் முன்பாக, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, ஒன்றிய செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றியப் பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கு மானியம் வழங்க வலியுறுத்தியும், ரயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணம் ரூ.50-ஐ குறைத்திட வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி: Ravi Chandran