தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
பார் போற்றும் புகழுடைய இந்தப் பெரியகோயிலைக் கட்டி தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி, நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 -ஆவது சதய விழா நவம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதி இரண்டு நாள்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி சதய நட்சத்திரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் முடிசூட்டிய நாள் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 1,039 சதய விழா வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதி இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெற உள்ளது.இந்த விழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தல் கால் நடும் விழா வெள்ளிக்கிழமை(நவ.1) காலை நடைபெற்றது. முன்னதாக, பந்தல் காலுக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தல் கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவினை சதயகுழு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Leave your comments here...