மாணவிக்கு பாலியல் தொந்தரவு – மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது.

Scroll Down To Discover

சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து ஆசிரியர் ஆனந்தனை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்த கமிட்டி அமைத்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாகின.

இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில் மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தனை இன்று கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் மயிலாடுதுறையில் அரசு உதவிபெறும் டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளிபள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை மீது மாணவி அளித்த புகாரின் பேரில், அவரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.