மாணவர்களின் நலனே முக்கியம் : 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு ரத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

Scroll Down To Discover

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலைவரிசை மிகப்பெரிய அளவில் பரவி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்தார் அப்போது கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.


பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில் ‘‘மாணவர்களின் உடல்நிலை, பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள் நலன்கருதி தேர்வு ரத்து. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது’’ என்றார்.