மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் செய்வது ஏன்?

Scroll Down To Discover

தர்ப்பணம் செய்வதால், மூதாதையர்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. தர்ப்பணம் அமாவாசையன்று செய்வதால், பிதுர்களுக்கு அதாவது உணவளிப்பதாக நம்பிக்கையாகும்.

தர்ப்பணம் செய்வதால், நம் முன்னோர்கள் மனமகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராகளாம். அவர்களுடைய ஆசியால், குடும்பம் வளர்ச்சி அடைவதுடன், நம் வாரிசுகளுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற சுபகாரியங்களும் வீட்டில் நடைபெறுமாம். மாதந்தோறும், பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது சாலச் சிறந்தது. அதிலும், தாய், தந்தையார் இல்லாதவர்கள், வருடத்தில், தை, ஆடி, மற்றும் மஹாளய அமாவாசையில், தகப்பனார் இறந்த திதீயில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாகும். அத்துடன், கோயில்களுக்கு சென்று, அங்குள்ள பிராமணர்களுக்கு காய்கறிகள், வஸ்திரங்கள், காணிக்கைகள் அளிக்கலாம். மேலும், சிவபெருமான், மகாவிஷ்ணுவுக்கு தீபம் ஏற்றுவதுடன், பசுக்களுக்கு அகத்திகீரை, வாழைப்பழங்கள் வழங்கலாம். கொரோனா காலம் என்பதால், சமூக இடைவெளியை பின்பற்றி, தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளய அமாவாசை தர்ப்பணம் மகாளய அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் காலை 7…மணி முதல் 7.35…மணி வரையிலும், காலை 7.45…மணி முதல் காலை 8.15…மணி வரையில், மதுரை மேலமடை மாநகராட்சி வார்டு அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், காலை 8.30..மணி முதல் 9.20..மணி வரை, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞானசித்தி விநாயகர் ஆலயத்திலும் தர்ப்பணங்கள் செய்து வைக்கப்படும்.

தர்ப்பணத்துக்கு வருவோர், தாம்பாளம், டம்ளர்,கறுப்பு எள் பாக்கெட் ஒன்று, வாழைப்பழம் இரண்டு..பச்சரிசி பத்து கிராம் மற்றும் காயாகறிகள், தட்சணைகள் கொண்டு வரலாம்.மஹாளய அமாவாசை என்பதால், சிவன், பெருமாளுக்கு தீபங்கள் ஏற்றலாம், பசுவுக்கு அகத்திக்கீரை வாங்கித் தரலாம், பிராமணர்களுக்கு தானங்கள் வழங்கினால், பிதுர்கள் தோஷம் நிவர்த்தியாகுமாம்.
மேலும், தொடர்புக்கு…9942840069, 8760919188…என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.