மழை வேண்டி சுவாமிக்கு அசைவ உணவை படைத்த பக்தர்கள்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள வலையபட்டி ஊராட்சியில் உள்ள அரசபட்டி கிராமத்தில் தான் இந்த நூதன பூஜை நடைபெற்றது.

கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூக இடை வெளியை பின்பற்றி, இந்த ஊரில் உள்ள சாத்தையா சுவாமிக்கு அசைவ உணவுகள் படைத்து மழை வேண்டி சிறப்பு பூஜைகளை நடத்தி வழிபட்டனர்.

இதையடுத்து வந்திருந்த அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கிராம விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.