மழையினால் சேதமான நெற்பயிர்கள் : அறுவடை செய்ய முடியாமல் சோகத்தில் விவசாயிகள்.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தெற்கு தாலுகா அவனியாபுரம் பகுதியில் நெல் விவசாயிகள் உள்ளனர்.

இப்பகுதியில் விவசாயத்திற்கு நடப்பட்ட நெல் குறித்த நேரத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், விளைந்த நெற்கதிர்கன் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

5.1\2 ‘ஏக்கருக்கு பயரிடப்பட்டுள்ள நெற்பயிர் தற்போது 3.1/2 ஏக்கர் அளவில் சாய்ந்து வீணாகி உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் எந்த வித நஷ்ட ஈடு எதுவும் வழங்கவில்லை.

இதுகுறித்து வேளாண்மைத் துறையினரிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றம் சாட்டுகின்றனர்.