பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் அயோத்தியில் புதிய குறுக்கு சாலை உருவாக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்பட்ட பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம், 92-வது வயதில் உயிரிழந்தார். லதா மங்கேஷ்கரின் நினைவாக அயோத்தியில் புதிய குறுக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. அவரது நினைவைப் போற்றும் வகையில் புதிய குறுக்கு சாலைக்கு அவரது பெயரிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுமானத்திற்கான உத்தரவை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அயோத்தி ஆய்வுக் கூட்டத்தில் அறிவித்தார்.15 நாட்களுக்குள் இதற்கான முன்மொழிவை அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அயோத்தி நகராட்சி கார்ப்பரேஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave your comments here...