மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டம், படா மல்ஹெரா தொகுதியில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில், எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர், பிரதியுமான் சிங் லோதி. இவர், எம்.எல்.ஏ., பதவியை, நேற்று முன்தினம் ராஜினாமா செய்த நிலையில், அதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்தார்.
आज बड़ा मलहरा विधायक श्री प्रद्युम्न सिंह लोधी जी ने प्रदेश अध्यक्ष श्री @vdsharmabjp जी एवं मुख्यमंत्री श्री @ChouhanShivraj जी की उपस्थिति में भाजपा की सदस्यता ली। भाजपा परिवार में उनका स्वागत है । pic.twitter.com/gPEJmzhIbs
— BJP Madhya Pradesh (@BJP4MP) July 12, 2020
இதையடுத்து ஆளுங்கட்சியான, பா.ஜ.க மாநில தலைமை அலுவலகத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில், நேற்று அக்கட்சியில் இணைந்தார்.ம.பி., மாநில காங்கிரசில் இருந்து மார்ச் மாதம், 22 எம்.எல்.ஏ.,க்கள் விலகினர். இதையடுத்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.ஆட்சியை, பா.ஜ.க கைப்பற்றியது. தற்போது, காங்கிரஸ்கில், மேலும் ஒருவர் விலகியதால், சட்டசபையில் அக்கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 91 ஆக குறைந்துள்ளது.
Leave your comments here...