மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்.!

Scroll Down To Discover

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைக்க ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ம் தேதி சமர்ப்பித்தது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றப்பட்டது. இனி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.