மத மாற்றத்தை யார் தடுத்தலும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்களும் தானும் ஆதரவு அளிப்போம்- கொக்கிகுமார் அதிரடி..!

Scroll Down To Discover

உலக நாடுகளிலும் உள்ள ஆன்மிக பக்தர்களை கவர்ந்தவர் நித்யானந்தா.பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.இந்நிலையில் அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான ‘அதிகாரபூர்வ’ இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தனக்கு என தனிக்கொடி, தனி பாஸ்போர்ட், தனி இலட்சினை போன்றவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள். தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைலாசம்’ தீவில் இலவச மருத்துவம், இலவசக் கல்வி வழங்கப்படும், யோகா, தியானம், ஆன்மிக மருத்துவம் வழங்கப்படும் என அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மாநில பொதுச்செயலாளர் கொக்கிகுமார் தனது முகநூலில்:-

மதமாற்றத்தை தடுக்கும் தாய்மதம் திருப்பும்  யாராக இருந்தாலும் அர்ஜுன் சம்பத் அவர்களும் தானும் இந்து மக்கள் கட்சியும் ஆதரவளிக்கும். #Why_I_Support_Nithyanandha #Nithyanandha #Kailaasa என பதிவு செய்து உள்ளார்.

இது குறித்து கொக்கிகுமார் அவர்களிடம் பேசிய போது :- தென் இந்தியாவில் நித்தியானந்த மத மாற்றத்தை தடுத்து வருவதாகவும், இந்து மதத்தில் இருந்து மதம் மாறி சென்ற பல லட்சம் மக்களை தாய் மதம் திருப்பி உள்ளார் என்றும் அதனால் இந்து மக்கள் கட்சியும் , தலைவர் அர்ஜுன் சம்பத் , தானும் நித்தியானந்தவிற்கு ஆதரவு என கூறியுள்ளார்.