மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சி தப்புமா…? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…!

Scroll Down To Discover

மத்திய பிரதேச மாநில அரசியலில் திடீர் திருப்பமாக நாளை (மார்ச் 16) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துமாறு சபாநாயகருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
ம.பி.யில் காங்கிரஸ் தலைமையில் முதல்வர் கமல்நாத் ஆட்சி நடக்கிறது. இம்மாநில மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்கள் திடீரென காங்.கிலிருந்து விலகி, பா.ஜகவிற்கு ஆதரவு அளித்தனர்.



இதனால் முதல்வர் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என சபாநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 22 எம்.எல்.ஏ.க்களும் ஆஜராகினர். இந்த சூழ்நிலையில் நாளை (மார்ச் 16-) சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த சபநாயகர் நர்மதா பிரசாத் பிரஜாபதிக்கு கவர்னர் லால்ஜிடாண்டன் உத்தரவிட்டுள்ளார்.