மத்திய தகவல் ஆணைய தலைவராக ஹீராலால் சமரியா பதவியேற்பு..!

Scroll Down To Discover

நாட்டின் மத்திய தகவல் ஆணைய தலைவராக பதவி வகித்து வந்த ஒய்.கே. சின்ஹாவின் பதவி காலம் கடந்த அக்டோபர் 3-ந்தேதி நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த பதவி காலியாக இருந்தது.

இதனை தொடர்ந்து, நாட்டின் மத்திய தகவல் ஆணைய தலைவராக ஹீராலால் சமரியா இன்று பதவியேற்று கொண்டார். இதற்காக, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

https://twitter.com/rashtrapatibhvn/status/1721406716112494764

இந்த ஆணையத்தில், 2 தகவல் ஆணையர்கள் தற்போது பதவியில் உள்ளனர். மத்திய தகவல் ஆணைய தலைவராக ஹீராலால் பதவியேற்றபோதிலும், தகவல் ஆணையர்களுக்கான 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மத்திய தகவல் ஆணையம், தலைமை தகவல் ஆணையாளர் ஒருவரின் தலைமையில் செயல்படுவதுடன் அதிக அளவாக 10 தகவல் ஆணையர்களை கொண்டிருக்கும்.

இதனை கவனத்தில் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கடந்த அக்டோபர் 30-ந்தேதி, காலியான பதவிகளை நிரப்பும்படி மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டு கொண்டது. இல்லையெனில், தகவல் அறியும் உரிமை சட்டம், செயலற்ற ஒன்றாகி விடும் என தெரிவித்து இருந்தது.இதன் தொடர்ச்சியாக, மத்திய தகவல் ஆணைய தலைவராக ஹீராலால் சமரியா நியமிக்கப்பட்டார்.