மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14-ந் தேதி மீண்டும் சென்னை வருவதாக தகவல்..?

Scroll Down To Discover

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14-ந் தேதி மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளார். அமித்ஷா வருகையின்போது அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதியாக வாய்ப்பு உள்ளது.

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே ஒருமித்த கருத்துகள் இன்னும் வெளிவராத நிலையில் அமித்ஷாவின் சென்னை வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் அமித்ஷா சென்னை வருகை தந்த போதுதான் அதிமுக – பாஜக இடையே சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என அறிவிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்திடம் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.