மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமனம்..!

Scroll Down To Discover

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கே.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரது தலைமையிலான அதிரடிப்படைதான் சந்தனக் கடத்தல் வீரப்பனை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது 1975-ம் வருட பேட்ச்,  ஐபிஎஸ் அதிகாரியான கே.விஜயகுமார், “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு  பிரச்சினைகளில் அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குவார்.

இதுதொடர்பாக,  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,

அடுத்த ஓர் ஆண்டிற்கு இந்த பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள், மாவோயிஸ்டு பாதிப்புள்ள மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்த உள்துறை அமைச்சகத்திற்கான ஆலோசகராக விஜயகுமார் இருப்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த கே.விஜயகுமார், அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பின், அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.