மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுஷ் சிகிச்சை மையங்கள்: சுகாதாரத்துறை ஒப்புதல்

Scroll Down To Discover

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ் மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி தனியார் ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை வைத்திய மையங்கள் மத்திய அரசின் சுகாதார திட்ட குழுவில் இணைக்கப்படும்.

இந்த மையங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மக்களிடையே ஆயுஷ் சிகிச்சை முறைகள் பிரபலம் அடைந்து வருவதால், இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

முன்மாதிரி திட்டமாக முதலில் தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள ஆயுஷ் சிசிச்சை மையங்கள், மத்திய அரசின் சுகாதார திட்ட குழுவில் ஓராண்டுக்கு இணைக்கப்படும். அதைத் தொடர்ந்து இத்திட்டத்தை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.