மத்திய அரசு உதவியுடன் சென்னை மெரினா-பெசன்ட் நகர் இடையே ரோப்கார் சேவை..!

Scroll Down To Discover

சென்னை கலங்கரை விளக்கம் – பெசண்ட் நகர் இடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போகுவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலமாக இந்தியாவில் 10 இடங்களில் ரோப் கார் சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் அடுத்தகட்டமாக சென்னை கலங்கரை விளக்கம் – பெசண்ட் நகர் இடையே 4.6 கிமீ நீளத்திற்கு ரோப் கார் சேவை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு ரோப்வே அமைப்புகளை ஆய்வு செய்து அமைக்கப்படவுள்ளதுடன், எதிர்கால தேவை, புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் கொடைக்கானல் – பழனி இடையே ரோப் கார் சேவை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.