மத்திய அரசின் தேசிய வாழ்க்கைப்போக்கு சேவை மையம், ஒர்க்ஃபிரீக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்..!

Scroll Down To Discover

சென்னை சாந்தோமில் இயங்கும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைப்போக்கு சேவை மையம், ஒர்க்ஃபிரீக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து, சென்னையில் வரும் 30 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கைப்போக்கு சேவை மையம், சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை 600 004, (வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடம், மூன்றாவது தளம்) என்ற முகவரியில், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

பிபிஓ, வங்கிப்பிரிவு, காப்பீட்டுப் பிரிவு, மின்னணு வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத் துறை, மார்க்கெட்டிங், விற்பனை, மனிதவளத் துறை உட்பட பல்வேறு பிரிவுகளில் தனியார் நிறுவனங்களில், புதியவர்களுக்கும், அனுபவமிக்கவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன. சம்பளம் மாதம் ரூ.10,000-லிருந்து ரூ.30,000 வரை. 22 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், பிளஸ் டூ முடித்தவர்களும், தகுதியான பணிகளுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், பொதுப்பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த, அனுபவமிக்கவர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தங்களது பெயர்களை www.workfreaks.in/applyjob -ல் 28 ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து கொள்ளாதவர்களும் நேரடியாக அந்த இடத்திற்கு வந்து பதிவு செய்யலாம் என்று மண்டல வேலைவாய்ப்பு உதவி அதிகாரி திரு சுஜித் குமார் சாஹூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.