மத்திய அரசின் உயர் அதிகாரிகளின் தகவல்களை திருட முயற்சி – மத்திய அரசு எச்சரிக்கை.!

Scroll Down To Discover

உலகம் முழுவதும் ஹேக்கர்கள் முக்கிய அதிகாரிகளின் தகவல்களை திருடி வருகின்றனர் என்பது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று மத்திய அரசின் முக்கிய உயரதிகாரிகளின் இமெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உள்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகளின் மெயில் ஐடி நேற்று ஹேக் செய்ய முயற்சி நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து முக்கிய துறையில் உள்ள உயர் அதிகாரிகளின் மெயில் ஐடி பாஸ்வேர்ட்களை மாற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் உயர் அதிகாரிகளின் தகவல்களை திருட முயற்சித்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் முக்கிய அதிகாரிகள் தங்களுடைய இமெயில் ஐடிகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.