மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கோயில் உண்டியல் திறப்பு.!

Scroll Down To Discover

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணைஆணையர்/ செயல்அலுவலர்
க.செல்லத்துரை, முன்னிலையில் 02-09-2021 அன்று இத்திருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது.

மேற்படி ,உண்டியல் திறப்பில் மதுரை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.விஜயன் இத் திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப் பாளர்கள், மதுரை இந்துசமய அறநிலையத்துறை தெற்கு வடக்கு ஆய்வர்கள் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் திறப்பில் ரொக்கமாக ரூ. 73,31,180 /- ( ரூபாய் எழுபத்தி மூன்றுலட்சத்து முப்பத்தி ஒன்றாயிரத்து நூற்றி எண்பது மட்டும் ) பலமாற்று பொன் இனங்கள் 590 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 700,  அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 22 வரப் பெற்றுள்ளன.