மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல்- போலீசார் விசாரணை..!

Scroll Down To Discover

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை பெஞ்சில் போலியான பெயரில் ,ரிட் மனு தாக்கல் செய்தவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் பூர்ண ஜெயா ஆனந்த். இவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 10ஆம் தேதி உயர்நீதிமன்றகிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது விசாரணைக்கு வரும்போது, போலியானது என்று தெரியவந்தது.

இவ்வாறு போலியான பெயரில் ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளை காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்..