மதுரை ஆதீனத்திற்கு 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை அமைப்பு.!

Scroll Down To Discover

மதுரை ஆதின மடத்தில் மறைக்க ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மடத்திற்கு சென்றுவருகின்றனர். தற்போது மறைந்த ஆதினத்தின் பளிங்கு சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் பார்த்து செல்கின்றனர்.
செய்தி : ரவிசந்திரன்