டாஸ்மாக் கடை திறக்ககூடாது: குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஒரு மணி நேரம் சாலை மறியல்.!

Scroll Down To Discover

மதுரை அருகே துவரிமான் கிராமத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைகக்கூடாது என, வலியூறுத்தி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் திங்கள்கிழமை காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், மதுரை- மேலக்கால் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.துவரிமான் வெங்கிடஜலபதி நகர் குடியிருப்போர் சங்கத்தினரும், கிராம பெண்களும், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், துவரிமான் கிராமத்தில் மதுபானக் கடையை திறக்காதே என, சாலையில் பதாததைகளை ஏந்தி கோஷமிட்டனர்.தகவலறிந்ததும், நாகமலைபுதுக் கோட்டை போலீஸார் வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மக்களை கலைந்து போக செய்தனர்.