மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை.!

Scroll Down To Discover

மதுரை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் முயற்சியாக, மதுரையில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ள 4 முக்கிய திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோயில், பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் மற்றும் திருப்பறங்குன்றம் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் அணிசேகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா பரவலின் 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.