மதுரையில் வேளாளர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..!

Scroll Down To Discover

மதுரையில் அனைத்து வேளாளர் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வேளாளர் என்ற பெயரினை எந்தவொரு சமூகத்தினருக்கும் வழங்க கூடாது என்று கோரிக்கை விடுத்து வேளாளர் அமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளாளர் சங்கத் தலைவர் பந்தல் ராஜா, நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.பி.முருகேசன், ஹரிஹரன் அண்ணா சரவணன், கார்வேந்தன், ஷகீலா கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டனர்.