தமிழக சட்டமன்றத் பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்ததை அடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் துணியால் மூடு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி உள்ளிட்டோர் சிலைகள் துணி கொண்டு மூடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக மதுரை யானைக்கல் சந்திப்பில் உள்ள தேசபிதா என்றழைக்கப்படும் மார்பளவு கொண்ட காந்தியின் சிலையும் வெள்ளைத் துணி கொண்டு மூடப்பட்டிருந்தது காந்தி ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
Leave your comments here...