மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியில் உள்ள திமுக பிரமுகர் வீட்டின் பெட்ரோல் வீசிய மர்மக் கும்பல், வீட்டின் முன்பு இருந்த எட்டு வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
மதுரை கீரைத்துறையில் வசிப்பவர் வி.கே. குருசாமி, திமுக பிரமுகருமான இவர் முன்னாள் மண்டலத் தலைவராக மதுரை மாநகராட்சியில் பணியாற்றியுள்ளார்.இன்று அதிகாலை இரண்டு டுவீலர்களில் நான்கு பேர் வந்து, குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, வீட்டு முன்பாக இருந்த வேன், டூவிலர்கள் உள்பட எட்டு வாகனங்களை தாக்கி உடைத்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதில் அதிஷ்டவசமாக வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர். இது குறித்து கீரைத்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.
செய்தி- மதுரை ரவி
Leave your comments here...