மதுரையில் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பைக்காரா வடக்கு பகுதியில் அமைந்துள்ள கபாலி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் இன்று அதிகாலை சுமார் 3.50 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து சுமார் 75,000 ரூபாய் கொள்ளை அடித்ததாக தெரியவருகிறது.

இதனை அடுத்து தகவலறிந்த இக்கோவிலின் நிர்வாகி வேல்முருகன் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி காட்சியைக் கொண்டு தேடி வருகிறார்கள்.பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .