மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்..!

Scroll Down To Discover

மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார். இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார்.தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

இல.கணேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய ஆளுநராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.