மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்: ராணுவ அதிகாரி உள்பட 7 பேர் பலி – பிரதமர் மோடி கண்டனம்

Scroll Down To Discover

மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி மகன் உள்பட 7 பேர் பலியாகினர்.

மணிப்பூரில் ராணுவ அதிகாரி, குடும்பத்தினர், ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேருமே பலியாகினர். மணிப்பூரில் அண்மைக் காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. மணிப்பூர் மியான்மர் எல்லையில் சூராசந்த்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

கர்னல் ரேங்கில் உள்ள அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகன் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என 7 பேருமே இந்தத் தாக்குதல் படுகொலையாகினர். இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மியான்மர் எல்லைக்கு அருகே உள்ள சுராசந்த்பூரில் ராணுவ வாகனங்கள் மீது கண்ணிவெடி மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடத்தியது எந்த பயங்கரவாத இயக்கம் என்பது தற்போது வரை தெரியவில்லை.

இது குறித்து பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.


“மணிப்பூரில் அசாம் ரைஃபில்ஸ் வாகன அணிவகுப்பு மீது நடைபெற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்று வீர மரணமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரியாதைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகம் என்றைக்கும் மறக்கப்படாது. இந்த துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கல்களை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.