மகா கும்ப மேளாவில் இதுவரை புனித நீராடிய யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாக, உ.பி., அரசு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து லட்சகணக்கிலான மக்கள் கலந்துகொண்டனர். நேற்று தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்களுக்கு அதாவது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சகணக்கிலான பக்தர்கள் குவிந்து வருவதால், 4,000 ஹெக்டேர் பரப்பளவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1.60 லட்சம் கூடாரங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று 23ம் தேதி உ.பி., அரசு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இன்று மதியம் 12 மணி நிலவரப்படி இதுவரை புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை, 10 கோடியை தாண்டியது. இன்று மட்டும், மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.
அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின் போது (சுமார் 3.5 கோடி) பக்தர்கள் புனித நீராடினர். 1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...