மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலி உரிமையாளர் துபாயில் கைது – இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கை!

Scroll Down To Discover

மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலியின் உரிமையாளர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலி உரிமையாளர் செளரப் சந்திரசேகர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது  திருமணத்தை ஐக்கிய அரேபிய எமிரேட்டில் ஆடம்பரமாக நடத்தினார். இத்திருமணத்திற்கு மும்பை மற்றும் நாக்பூரில் இருந்து விருந்தினர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இத்திருமணத்திற்கு செளரப் சந்திரசேகர் 200 கோடி செலவு செய்ததாக கூறப்படுகிறது. மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலி மூலம் கிடைத்த பணத்தை ஹவாலா முறையில் இத்திருமணத்திற்கு செலவு செய்ததாகவும், அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சவுரப் சந்திரகர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் ரூ.6000கோடி மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துபாயில் சவுரப் சந்திரகர் கைது செய்யப்பட்டார். அவருடன் மற்றொரு உரிமையாளரான ரவி உப்பாலும் கைதாகி உள்ளார். சவுரப் சந்திரகரை விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.