மகளிர் குழுவில் பெற்ற கடனை கட்ட மிரட்டுவதாக மகளிர் குழுவினர் புகார்..!

Scroll Down To Discover

மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: சக்கிமங்கலம் அம்பேத்கர் நகரில் குடியிருந்து வருகிறோம். வேலை வாய்ப்பு இல்லாததால், மகளிர் குழுவைச் சேர்ந்த 30 பெண்கள் குழுவில் கடன் பெற்று சிறு தொழில்கள் செய்து பிழைத்து வருகிறோம்.

தற்போது கொரோனா காலம் என்பதால், தற்போது கடனை திரும்ப செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் மகளிர் குழு மேலாளர்கள் அடிக்கடி வந்து வட்டியுடன் கடனை கட்டச் சொல்லி தொந்தரவு செய்வதுடன், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், முத்துமாரி மற்றும் மகளிர்கள் கோரியுள்ளனர்.