போலி பிரமாண பத்திரம் தாக்கல்: சமாஜ்வாதி எம்.எல்.ஏ அப்துல்லா ஆசம்கான் தகுதி நீக்கம்..!

Scroll Down To Discover

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாம் கானின் மகன் அப்துல்லா அசாம். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்பூர் மாவட்டம் சுவார் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது, இவர் தனது வயது குறித்து போலி ஆவணங்களைத் தயாரித்து சமர்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் இன்று:-   வழக்கின் விசாரணை முடிவில், அப்துல்லா அசாமை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் 25 வயதிற்கும் குறைவாக இருந்த இவர், போலி வயதுச் சான்றிதழை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்துல்லா அசாம் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார்