கடந்தாண்டு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார். தொடர்ந்து சினிமா, அரசியல் என பயணப்பட்டு வரும் அவர் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2ஆம் ஆண்டாக மாணவ, மாணவியர்களை கௌரவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க அதிகாலையிலேயே விஜய் வருகை தந்தார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை, மரக்கன்று ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது,:- “நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி தங்கைகளுக்கும், பெருமையுடன் வந்துள்ள பெற்றோர்களுக்கும், விழாவை ஏற்பாடு செய்த ஆனந்திற்கும், தவெக தோழர்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பானவர்களுக்கும், எனது பணிவான வணக்கங்கள்.
மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஒரு சிலரை சந்தித்தால் அவர்களது பாசிட்டிவ் கெமிஸ்ட்ரி நமக்கும் வொர்க் அவுட் ஆகும் என்பார்கள், அந்த வகையில் உங்களை சந்தித்ததில் ஒரு பாசிட்டிவ் கெமிஸ்ட்ரி பயங்கரமாக வொர்க் அவுட் ஆகிறது.
உங்களுக்கு கரியரில் முடிவு எடுப்பதில் தொய்வு குழப்பம் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் பெற்றொர்கள் அல்லது உங்களது ஆசிரியர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். எல்லா துறையும் நல்ல துறைதான் நீங்கள் எடுக்கும் துறையில் 100 சதவீதம் உழைப்பு போட்டால் நல்லது தான்.
உங்களுக்கு பிடித்த துறையில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக நாம் ஒரு துறையை தேர்வு செய்யும் போது அதில் எந்த அளவு தேவை உள்ளது என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் நன்றாக செயல்பட்டால் தலைமை இடத்திற்கு வர முடியும்.
இங்கு என்ன அதிகம் தேவை என்றால் நல்ல தலைவர்கள், நான் இதனை அரசியல் ரீதியாக சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும், எதிர்காலத்தில் அரசியலும் கரியரில் ஒரு தேர்வாக இருக்க வேண்டும். நன்கு படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர வேண்டும். படிக்கும் போது மறைமுகமாக அரசியலில் ஈடுபட வேண்டும். தினமும் செய்திதாளை படிங்கள். ஒரே செய்திய ஒரு செய்தி பத்திரிகை ஒரு மாதிரியும், மற்றொரு செய்தி பத்திரிகை வேறு மாதிரியும் எழுதுவாங்க. இங்க செய்தி வேற கருத்து வேற என்பது உங்களுக்கு தெரியவரும்
சமூக ஊடங்களில் இப்போ எல்லாம் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் காட்டுகிறது. இதை எல்லாம் பார்த்து எது உண்மை, எது பொய் என்பதை மட்டும் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போதான் உண்மையிலேயே நாட்டில் என்ன பிரச்சனை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அது தெரிந்தாலே ஒரு சில அரசியல் கட்சிகள் செய்கிற பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல், எது சரி, எது பொய் என்று ஆராய்ந்து பார்த்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும்
பெற்றோருக்கு அடுத்தபடியாக நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்படும், அதனால் நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். தவறான நண்பர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். மேலும் நீங்கள் தவறான பழக்கத்தில் ஈடுபட்டு, உங்களது அடையாளத்தை இழந்து விடாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது:-
ஒரு போதும் தவறான பழக்கத்தில் ஈடுபடாதீர்கள். ஈடுபடவும் கூடாது. உங்களின் அடையாளத்தை எந்த காரணத்திற்காகவும் இழந்துவிடாதீர்கள். don’t loose your identity at any cost. ஏனெனில் சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. முக்கியமாக இளைஞர்களின் மத்தியில் அதிகமாகிவிட்டது.
ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்தின் தலைவர் என்ற முறையிலும் இது குறித்தௌ எனக்கு அச்சம் இருக்கிறது.
போதைப் பொருளை தடுப்பது அரசின் கடமை, அரசின் கடமை; ஆளும் அரசு அதனை தவற விட்டு விட்டார்கள் என்பதை பற்றியும் நான் பேச வரவில்லை; அதற்கான மேடையும் இது இல்லை. அரசாங்கத்தை விட நமது லைஃபை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்; நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்
”say no to temporary pleasures.. say no to drugs”.. எனக்காக இதை ஒரே ஒரு முறை இதை திரும்பி கூற முடியுமா….இந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார் தவெக தலைவர் விஜய்!
இந்நிலையில் நெட்டிசன்கள் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லியோ படத்தில் போதைப் பொருட்களை ஆதரிக்கும் வகையில் பாடல் வரிகள் இடம் பெற்றது. அந்தப் பாட்டில் ‘பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,’ என்ற வரிகளும் ‘மில்லி உள்ள போனா போதும், கில்லி வெளில வருவான்டா,’ என்ற வரிகளும், ‘பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,’ ஆகிய வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. மேலும், காணொளியில் எந்த ஓர் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெறவில்லை. கண்டனத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது – மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் வேதனை 😂😂 pic.twitter.com/GikCksMsfB
— Vanitha (@Vanitha06119914) June 28, 2024
நடிகர் விஜய் உங்களுக்கு அரசியல் பேசணும்னு ஆசை இருந்தா மாநாடு போட்டு அரசியல் பேசுங்க இல்லைன்னா பத்திரிக்கையாளர்கிட்ட அரசியல் பேசுங்க அதை விட்டுட்டு படிக்கிற குழந்தைகளை கூப்பிட்டு வச்சி அவங்ககிட்ட அரசியல் பேசி வாழ்க்கைக்கு அடித்தளமான அவங்க படிப்பை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க…??! pic.twitter.com/XiF4sEZcXv
— Pandidurai (@Pandidurai274) June 28, 2024
எற்கனவே ஏகப்பட்ட டாக்டர் இஞ்சினியர் இருப்பதால் அதுதான் படிக்கனும்னு நினைக்காதீங்க
~நடிகர் விஜய் pic.twitter.com/yY59a2sTfX— ராஜா மதராசி (@Anda_talks) June 28, 2024
விஜய் விருது வழங்கிய விழாவில் நீட் தேர்வு விவகாரம் பற்றி வாய் திறக்காதது ஏன்..??
நீட் தேர்வு சம்பந்தமாக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது நடிகர் @actorvijay மௌனம் காப்பது ஏன்..??#BanNEET#தமிழகவெற்றிக்கழகம்#ThalapathyHonorsStudents #ThalapathyStudentsMeet pic.twitter.com/jzvAq3sr1y
— KCR.THANGARAJ (@GOLDKINGGOLDKI4) June 28, 2024
https://twitter.com/VSamattiyar/status/1806607638991421597
இந்நிலையில் இன்று விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் போதைப் பொருளை தடுப்பது அரசின் கடமை, அரசின் கடமை ”say no to temporary pleasures.. say no to drugs”.. எனக்காக இதை ஒரே ஒரு முறை இதை திரும்பி கூற முடியுமா….இந்த உறுதிமொழியை நீங்கள் அனைவரும் ஏற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார். இதனை லியோ படத்தில் நடிகர் விஜயின் பாடலை மேற்க்கொள்கட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
Leave your comments here...