பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

Scroll Down To Discover

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. சாம்பல் மாவட்டம் சவுத்ரி சாராய் பகுதியில் ஒரு அரசு பஸ்சுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சாம்பால் மாவட்டத்தில் இணையதள இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து , அவற்றை ஏலத்தில் விட்டு இழப்புகளை ஈடுகட்டுவோம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில், சமாஜ்வாடி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒட்டு மொத்த நாட்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி வருகிறன்றன. லக்னோ மற்றும் சம்பல் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, ஏலத்தில் விட்டு, இழப்புகளை ஈடுசெய்வோம்” என்றார்.