பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துவதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டுக்கு பேஸ்புக் நிறுவனம் ..!

Scroll Down To Discover

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டிய காங்., எம்.பி., ராகுல், ‛இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்ஆப்பை பாஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது.

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது,’ எனக்கூறியிருந்தது.

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ரவிசங்கர் பிரசாத், ‛பா.ஜ., கட்டுப்படுத்துகிறது எனக் கூறுவதற்கு, காங்கிரஸ் தலைவர்களுக்கு அருகதையில்லை. பிரதமர் மோடியை பற்றி தவறான செய்திகளை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ‘கேம்பிரிட்ஜ் அனால்டிகா’ என்ற நிறுவனத்தை, காங்கிரஸ் பயன்படுத்தியதாக, ஏற்கனவே வந்த தகவல்களை மறந்து விட்டு, ராகுல் பேசுகிறார்,’ என பதிலடி கொடுத்தார்.

ராகுலின் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேஸ்புக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் கூறும் வகையில், “ யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், ஃபேஸ்புக் பாரபட்சமற்ற தனது கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.