பேராவூரணி அருகே சொர்ணகாட்டில் குறும்பட திருவிழா..!

Scroll Down To Discover

தஞ்சை மாவட்டம் ,பேராவூரணி அருகே உள்ள சொர்ணகாட்டில் குறும்பட திருவிழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு செரியலூர் கவிஞர் எஸ்.பி. செல்வம் தலைமை வகித்தார்.

திருக்குறள் தங்கவேலனார், சீனிவாசன் ,வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலகிருஷ்ணாபுரம் ப. மகாவின் வேணாங்க என்னைப்போல.. குறும்படத்தை வெளியீட்டு திமிரு பட இயக்குனர் தருண்கோபி வாழ்த்துரை வழங்கினார். அதனை கீரமங்கலம் தொழிலதிபர் ஜம்புநாதன் பெற்றுக்கொண்டார். ப.மகவின் புதிய உபதேசம் குறும்படத்தை அடுத்த சாட்டை, மூக்குத்தி அம்மன், கலை இயக்குனர் ஆர்.விஜயகுமார் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

அந்த குறுந்தகட்டை சொர்ணக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஆர். விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். ப.மகா பாடிய எகிறுதடா போத ..பாடல் குறுந்தகட்டை உதவி இயக்குனர் ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் ம.மு.கண்ணன், பட்டுக்கோட்டை தேமுதிகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் மனுநீதிசோழன், பாடலாசிரியர் செபுலோன், பட்டுக்கோட்டை சிவா, நலிம், தயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.