நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அவர்களது மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி நிற்கதியாய் நிற்பதாக தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது.
இதனை அறிந்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சபியுல்லா அவர்கள் அந்த நபா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், மாஸ்க் சானிடைசர் ஆகியவற்றை வழங்கியதோடு வீட்டு செலவிற்காக ரூ.5,000/- வழங்கினார்.
மேலும் அந்த பிள்ளைகளின் படிப்பிற்காக குருகுலம் பள்ளி மற்றும் வித்யாலயா பள்ளிகளில் கல்வி பயில ஏற்பாடுகளும் செய்தார். தகுந்த நேரத்தில் உதவி செய்த வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களை காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
Leave your comments here...