கேரள மாநிலம் பாலக்கோட்டில் ஜே.சி.பி இயந்திரமும், ஜீப்பும் மோதிக்கொண்ட விபத்தில் சாலையோரம் நின்றிருந்த இளைஞர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.பாலக்காட்டில் இருந்து மன்னார்காடு செல்லும் சாலையில் அதிவேகமாக வந்த ஜேசிபி இயந்திரம் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே கடந்தது.
வரும் ஆபத்தை அறியாமல் டூவீலரின் மீது அமர்ந்து வேறு திசையை நோக்கி இளைஞர் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த விநாடி ஜேசிபி மோதப்போகிறது என்ற தருணத்தில் எங்கிருந்தோ வேகமாக வந்த ஜீப் ஜேசிபி மீது மோதி அதை தடுத்தது.தற்போது இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது
இந்தியாஉள்ளூர் செய்திகள்
July 27, 2020
Leave your comments here...