ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதத்தை நாடெங்கும் எழுப்பியுள்ளது. இவ்விவகாரத்தில் தெலங்கானா காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததால், சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, தமிழக டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில்:- ஆபத்து என அழைப்பு வந்தால், காவல்துறையினர் உடனடியாக உதவ வேண்டும். புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தி நேரத்தை வீணடிக்கக்கூடாது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த வேண்டும். ‘காவலன்’ செயலியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவலன் செயலி குறித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த ஆப் குறித்து பொது இடங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். ஆபத்து ஏற்படும் போது உடனே போலீசாரை அழைக்கும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ வேண்டும். காவல்துறை அதிகாரிகள் 10ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...