பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து – உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை..!

Scroll Down To Discover

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று காலையில் பெங்களூருவில் இருந்து காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் (12551) கவுகாத்தி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் காலை 11.55 மணியளவில் ரயிலானது நெர்குந்தி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.