புரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடக்கம்

Scroll Down To Discover

புரெவி புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன.

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 3வது நாளாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டு  தூத்துக்குடி, மதுரை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய 14  விமானங்கள் ரத்தானதோடு, 20க்கும் மேற்பட்ட  விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதனால், பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களும் புயல் மழையால் மூடப்பட்டன. புரெவி வலுவிழந்ததையடுத்து இன்று முதல் வழக்கமான விமான சேவைகள் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.