புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பா.ஜ.க.வைச் சேர்ந்தசெல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பா.ஜ.க. மாநிலப் பொருளாளர் எஸ்.செல்வகணபதி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
இதில், பா.ஜ.க வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாத நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை.இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையொட்டி பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-புதுச்சேரியில் இருந்து நமது கட்சியைச் சேர்ந்த எஸ்.செல்வகணபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கிருந்து நமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதன் முதலாக மாநிலங்களவை எம்.பி.யாகி இருப்பது பா.ஜ.க. தொண்டர் ஒவ்வொருவருக்கும் மகத்தான பெருமை அளிப்பதாகும்.
புதுச்சேரி மக்கள், எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் நெகிழ்ச்சி அடைகிறோம். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு அதில் மோடி கூறி உள்ளார்.
Leave your comments here...