புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும் – பிரதமர் மோடி

Scroll Down To Discover

புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு தொடங்கி உள்ளது. ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசிய கல்வி கொள்கையின் பங்கு’ என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கவர்னர்கள், கல்வி மந்திரிகள், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய கல்வி கொள்கை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக உள்ளது. மாணவர்களின் திறனையும் அறிவையும் வளர்க்கும். மாணவர்கள் கற்பதை, வெளிக்கொண்டு வர உதவுகிறது. திறனை வளர்க்க உதவுகிறது. பரீட்சை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை தடுக்க உதவுகிறது.சர்வதேச கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப துறைகளை தேர்வு செய்வதற்கு உதவுகிறது.


புதிய கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களது கல்வி கொள்கையாக பார்க்கின்றனர். கொள்கை வகுப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன.கல்வியில் மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பங்குண்டு. புதிய கொள்கை மற்றும் கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்க முக்கியம். அறிவுசார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. 21 நூற்றாண்டில் சமூக மற்றும் பொருளாதார அம்சத்திற்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.