புகார்களின் அடிப்படையில் மே மாதத்தில் இந்தியாவில் 19 லட்சம் கணக்கு முடக்கம்: வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்..!

Scroll Down To Discover

இந்தியாவில் வாட்ஸ் அப் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கடந்த மே மாதத்தில் 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கைகள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் பெரிய டிஜிட்டல் தளங்கள் (அதாவது 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் கொண்டிருக்க வேண்டும்) வெளியிட வேண்டும்.

இதுகுறித்து வாட்ஸ்அப் செய்திதொடர்பாளர் கூறுகையில், ‘சமீபத்திய மாதாந்திர அறிக்கையில் வெளியாகியுள்ள தகவலின்படி, மே மாதத்தில் வாட்ஸ்அப் 1.9 மில்லியன் (19 லட்சம்) இந்திய கணக்குகள் வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. பயனர்களிடமிருந்து பெறப்பட்ட எதிர்மறையான கருத்துக்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளையும், மார்ச் மாதத்தில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் தடை செய்துள்ளது’ என்று கூறினார்.