புகழ்பெற்ற மருத்துவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..!

Scroll Down To Discover

கொரோனா தொற்றால் உயிரிழந்த புகழ்பெற்ற மருத்துவரை கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்த இராயக்கோட்டை தமுமுக வினர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் இராயக்கோட்டை புகழ்பெற்ற கும்முனூர் டாக்டர் அவர்கள் கொரோனா தொற்றால் 27.09.2020 பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா தலைமையிலான தன்னார்வலர்கள் உடலை பெற்று இராயக்கோட்டையில் நல்லடக்கம் செய்தனர்

இந்த சேவையில் நகர தலைவர் ஷாநவாஸ் தலைமையில் ஒன்றிய தலைவர் நூர் அஹ்மத், ஒன்றிய நிர்வாகி பர்க்கதுல்லா கான்,பத்தலபள்ளி கிளை பொருளாளர் மகபூப் பாஷா, ஒன்றியச் செயலாளர் அமானுல்லா,நகர செயலாளர் ரியாஸ்,ஒன்றிய பொருளாளர் ரபிக் அப்ரோஸ் மற்றும் ராயக்கோட்டை நகர ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்இந்த மகத்தான சேவையை ஜமாத்தார்கள் , பொதுமக்கள் வெகுவாக பாராட்டி தமுமுக வினருக்கு நன்றியை தெரிவித்தார்கள்.

செய்தி : mohammed younus